அம்மாபேட்டை அருகே தீக்காயம் ஏற்பட்ட பெண் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே தீக்காயம் ஏற்பட்ட பெண் உயிரிழப்பு
X

அம்மாபேட்டை காவல் நிலையம் (பைல் படம்).

அம்மாபேட்டை அருகே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் தீக்குளித்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாணிக்கம் பாளையத்தை சேர்ந்தவர் செல்லக்கிளி. இவருக்கும் ஆறுமுகம் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 2ம் தேதி மீண்டும் வாய்த் தகராறு ஏற்படவே ஆறுமுகத்தை பயமுத்த செல்லக்கிளி மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார்.

இதனை தடுக்க முயன்ற ஆறுமுகத்திற்கும் கையில் தீக்காயம் ஏற்பட்டது. வீட்டின் அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து முதலுதவி சிகிச்சை பெற பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்லக்கிளி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!