/* */

பவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் புகுந்த 7 அடி நீள பாம்பு

பவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாக அலுவலகத்தில் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு, உயிருடன் பிடிக்கப்பட்டு, மலைப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் புகுந்த 7 அடி நீள பாம்பு
X

பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் பிடிபட்ட பாம்பு.

ஈரோடு மாவட்டம் பவானியில் சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில், இன்று மாலை, ஒரு பாம்பு ஊர்ந்து வந்ததை அங்கிருந்த ஊழியர்கள் பார்த்துள்ளனர். இதைக் கண்டு கூச்சலிட்டதால் பாம்பு, உள் அறையில் புகுந்து பதுங்கிக் கொண்டது. இதுகுறித்த தகவலின் பேரில், பவானி தீயணைப்புப் படையினர் விரைந்து பாம்பைப் பிடிக்க முயன்றனர்.

நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், தீயணைப்புப் படையினர் பாம்பை உயிருடன் பிடித்து, பையில் போட்டு கட்டினர். பிடிபட்டது சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, அடர்ந்த மலைப்பகுதியில் அந்த பாம்பு விடுவிக்கப்பட்டது. இதனால், கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 11 Nov 2021 1:30 PM GMT

Related News