கோரிக்கைகளை வலியுறுத்தி பவானியில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பவானியில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர்.

பவானி நகராட்சி அலுவலகம் முன்பு, தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

பவானி நகராட்சி அலுவலகம் முன்பு, தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.செல்லப்பன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன், பவானி நகராட்சி ஏஐடியூசி தொழிற்சங்கத் தலைவர் ப.மா.பாலமுருகன், கட்டட கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

சுகாதாரம், குடிநீர் வழங்கும் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது. தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தைக் குறைக்காமல், சட்டப்படியான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், சுய உதவிக்குழு மூலம் பணிபுரியும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தேவைக்கேற்ப தூய்மைப் பணியாளர்களை புதிதாக பணியில் அமர்த்த வேண்டும் என்று, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்