கவுந்தப்பாடிபுதூரில் நிதி நிறுவனர் வீட்டில் கொள்ளை

கவுந்தப்பாடிபுதூரில் நிதி நிறுவனர் வீட்டில் கொள்ளை
X

சிசிடிவியில் பதிவான கொள்ளையனின் உருவம்.

கவுந்தப்பாடிபுதூரில் நிதி நிறுவனர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.70லட்சம் மற்றும் இரண்டரை சவரன் நகை கொள்ளை.

பவானி அருகே உள்ள கவுந்தப்பாடிபுதூரை சேர்ந்தவர் சக்திசண்முகம் நிதி நிறுவன அதிபரான இவர் வீட்டில் முன்புறம் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் பின்புறம் புதிதாக வீடு கட்டியுள்ளார். நேற்று இரவு முன்புறம் உள்ள கதவை மூடிவிட்டு பின்புறம் உள்ள புதிய வீட்டில் சக்திசண்முகம் , அவரது மனைவி செல்வி மற்றும் மகன்கள் ஆகியோர் தூங்க சென்று விட்டனர். இன்று அதிகாலை செல்வி கடையை திறக்க வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்




இதுகுறித்து கணவரை அழைத்து உள்ளே வந்து பார்த்த போது மேசை உடைக்கப்பட்டு அதில் இருந்த 1.70 லட்சம் ரூபாயும், வீட்டின் உள்ளே இருந்த பிரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த இரண்டரை சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றது தெரிய வந்தது. இது குறித்து சக்திசண்முகம் கவுந்தப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த காண்கணிப்பு கேமராவில் சுண்ணாம்பு கலவையை பூசி மறைத்து விட்டு கொள்ளையடித்து சென்றுவிட்டது கண்டுபிடிக்கபட்டது. மற்றோரு கேமராவில் கொள்ளையானின் உருவம் பதிவாகியுள்ளது.




மேலும், ஈரோட்டில் இருந்து தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture