அடுக்கு மாடி குடியிருப்பு வேண்டாம்: பவானி ஆற்றங்கரை பொதுமக்கள்

அடுக்கு மாடி குடியிருப்பு வேண்டாம்: பவானி ஆற்றங்கரை பொதுமக்கள்
X

ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் 

பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள், தங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வேண்டாம் என மனு அளித்துள்ளனர்.

பவானி பசுவேஸ்வரர் வீதி மற்றும் ஜங்கமர் வீதியை சேர்ந்தவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திராவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பவானி, பசுவேஸ்வரர் வீதி மற்றும் ஜங்கமர் வீதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 30 வருடங்க ளுக்கும் மேலாக காவிரி ஆற்றங்கரை யோரம் வசித்து வருகிறார்கள். எங்களில் பெரும்பாலானோர் மீன் பிடிக்கும் தொழிலிலும், விசைத்தறித் தொழிலில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த நிலையில், ஒரு மாத காலத்துக்குள் எங்கள் வசிப்பிடத்தை காலிசெய்து, புறநகர் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குச் செல்ல வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அங்கு சென்றால், காவிரி ஆற்றின் மறுகரையில் உள்ள குமாரபாளையத்துக்கு விசைத்தறி தொழிலுக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி, அங்கன்வாடிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், குழந்தைகள் அனைவரும் சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்து பவானி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

தவிர மீன்பிடி தொழில் செய்பவர்களும் தினமும் சுமார் 10கி.மீ. பயணம் செய்து தான் ஆற்றுக்குச் சென்று தொழில் செய்ய முடியும் நிலை ஏற்படும். காவிரியில் அதிக அளவில் தண்ணீர் வந்தாலும் குடியிருப்புகளில் புகுந்த தண்ணீர் 2 அல்லது 3 நாளிலேயே வடிந்து விடுகிறது. இதனால் பவானியில் காவிரி ஆற்றங் கரையோரம் பசுவேஸ்வரர் தெரு, ஜங்கமர் தெரு மக்களின் வாழ்வாதாரம் கருதி எங்கள் குடியிருப்புகளை காலிசெய்யச் சொல்லும் முடிவை அதிகாரிகள் கைவிட வேண்டும்.

வரும் காலத்தில் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்து, குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தாலும் நாங்கள் அரசிடம் நிவாரணம், உதவி என எதுவும் கேட்க மாட்டோம். எனவே, எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, காலம் காலமாக தற்போது நாங்கள் வசித்து வரும் பகுதியிலேயே தொடர்ந்து வசிக்க நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil