பவானி ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத முதியவர் உயிருடன் மீட்பு

பவானி ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத முதியவர் உயிருடன் மீட்பு
X

மீட்கப்பட்ட முதியவர், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

பவானி அருகே ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத முதியவரை உயிருடன் மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி காடையாம்பட்டி ஆற்றின் கரையோரம் உள்ள கழிவுநீர் பள்ளத்தில், அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் விழுந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பவானி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், முதியவரை உயிருடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முதியவரின் விபரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!