பவானியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு கொடுத்தாச்சு

பவானியில்  கொரோனா தடுப்பூசி  போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு கொடுத்தாச்சு
X

பவானி தொகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலிகளுக்கு தாசில்தார் முத்துகிருஷ்ணன் நேரில் பரிசுகள் வழங்கினார். 

பவானியில் ஏற்கனவே அறிவித்தபடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பவானி:

பவானி தொகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

செப். 12ல் பவானி தொகுதிக்குட்பட்ட பவானி, அம்மாபேட்டை, பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு தங்க நாணயம், வெள்ளி விளக்கு, வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என வருவாய்த்துறையினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.

பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டையை சேர்ந்த வாசுதேவன், கூத்தம்ப்பட்டியை சேர்ந்த சென்னாக்கவுண்டர் ஆகியோருக்கு தலா ஒரு கிராம் தங்க காசு வழங்கப்பட்டது. சொக்காரம்மன் நகரை சேர்ந்த வசந்தாமணி, சுல்லிமேட்டை சேர்ந்த கார்த்தி ஆகியோருக்கு வெள்ளி விளக்குகளும், மேலும் 10 பேருக்கு 500 ரூபாய் மதிப்புள்ள வேட்டி, சேலைகள், மூன்று பேருக்கு 400 ரூபாய்க்கு ரீ சார்ஜ் கூப்பன் வழங்கப்பட்டது. இதனை பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார் சரவணன் மற்றும் அலுவலர்கள் அதிர்ஷ்டசாலிகள் இருப்பிடத்திற்கே சென்று வழங்கினார்கள்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!