சித்தோடு மார்க்கெட்டில் வெல்லம், நாட்டுச்சர்க்கரை விலை உயர்வு

சித்தோடு மார்க்கெட்டில் வெல்லம், நாட்டுச்சர்க்கரை விலை உயர்வு
X

கோப்பு படம்

பண்டிகை காலம் என்பதால், சித்தோடு மார்க்கெட்டில், வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை விலை உயர்ந்துள்ளது.

ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில், நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவை மூட்டைக்கு ரூ.60 வரை விலை உயர்ந்து காணப்பட்டது.

ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் மார்க்கெட்டில், நேற்று வாராந்திர ஏலம் நடைபெற்றது. 30 கிலோ எடைகொண்ட 1,500 மூட்டைகள், நாட்டு சர்க்கரை விற்பனைக்கு வந்தன. ஒரு மூட்டை ரூ.1,200 முதல் ரூ.1,300விற்பனையானது. அச்சு வெல்லம் 900 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை ரூ.1,180 முதல் ரூ.1,220 வரை விற்பனையானது.

உருண்டை வெல்லம் 30கிலோமூட்டை 4,600 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை ரூ.1,210 முதல் ரூ.1,290 என்ற விலையில் விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம், உருண்டைவெல்லம் ஆகியவை மூட்டைக்கு தலாரூ.60 வரை விலை உயர்ந்து காணப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture