பவானியில் பொதுமக்களுக்கு பப்பாளி சாறு வழங்கும் நிகழ்வு

பவானியில் பொதுமக்களுக்கு பப்பாளி சாறு வழங்கும் நிகழ்வு
X

பப்பாளி சாறு வழங்கிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி சார்பில் பவானியில் பொதுமக்களுக்கு பப்பாளி சாறு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவில், இன்று காலை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் துரைராஜா தலைமையில், டெங்கு தொற்று பரவ துவங்க உள்ள சூழ்நிலையால் பொதுமக்களுக்கு நோய்களின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள பப்பாளி சாறு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஸ்ரீ குமார், நகர செயலாளர் சிவகுமார், நகர தலைவர் காவேரி சேகர், நகர துணைச் செயலாளர் கந்தசாமி , நகர இளைஞரணி தலைவர் வினோத், நகர பொருளாளர் சுரேஷ்குமார், நகர ஐடி விங் செயலாளர் உதயகுமார் மற்றும் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!