மேட்டூர் அணை நள்ளிரவில் திறக்க வாய்ப்பு: காவிரி கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை நள்ளிரவில் திறக்க வாய்ப்பு: காவிரி கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை
X

பவானி பகுதி காவிரி ஆறு.

ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையானது தற்போது 120 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக அணையிலிருந்து இன்று (13.11. 2021) இரவு 11. 00 மணியளவில் 30,000 கன அடி நீர் எந்தநேரத்திலும் திறந்துவிடப்படலாம்.

இதனால் ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சிங்கம்பேட்டை , காடப்பநல்லூர் , கேசரிமங்கலம், வரதநல்லூர், சன்னியாசிப்பட்டி, ஊராட்சி கோட்டை , குருப்பநாயக்கன் பாளையம், பவானி மற்றும் இதர ஊர்களின் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஆற்றில் குளிக்கவோ , துவைக்கவோ செல்லவேண்டாம் என்றும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி