மகாளய அமாவாசை: கூடுதுறையில் தரிசனம், தர்ப்பணம் செய்ய தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்

மகாளய அமாவாசை: கூடுதுறையில் தரிசனம், தர்ப்பணம் செய்ய தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்
X

கூடுதுறை (பைல் படம்)

பவானி கூடுதுறையில் மகாளய அமாவாசை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்யவும், தர்ப்பணம் செய்யவும் தடை விதிப்பால் பொதுமக்கள் ஏமாற்றம்.

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் காவிரி, பவானி, அமுத நதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடமான பவானி கூடுதுறையில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் வேதநாயகி உடனமர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையான மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்ய தமிழக முழுவதும் இருந்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கூடுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் யாரும் சுவாமி தரிசனம் செய்யவும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேற்று உத்தரவிட்டுள்ளார். இன்று மகாளய அமாவாசை காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் கூடுதுறையில் தர்ப்பணம் செய்யாமல் காவிரி கரைகளிலும், காலியங்கராயன் வாய்க்கால் ஓரத்திலும் தர்ப்பணம் செய்து விட்டு சென்றனர்.


Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி