ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு விதிமீறியதாக 575 பேர் மீது வழக்கு

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு விதிமீறியதாக 575 பேர் மீது வழக்கு
X

ஈரோடு மாவட்டத்தில், தேவையின்றி வெளியே திரிந்தவர்களை பிடித்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில், ஊரடங்கின் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 575 பேர் மீது வழக்கு பதிவு செயயப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது முகக்கவசம் அணியாமல் வந்த 227 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்டத்தில், ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 575 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், 530 இருசக்கரவாகனங்களும், 21 சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் ரூ.3.33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பவானி பகுதிகளில் வழக்கத்தை விட வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. சோதனைச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலோனோர் மருத்துவ காரணங்களுக்காக வெளியே செல்வதாக போலீசாரிடம் கூறினார். இதனால் போலீசார் வேறு வழியின்றி அவர்களை அனுமதித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil