/* */

ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் முதல்நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில்  முதல் நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை
X

கொரோனா தாக்கம் காரணமாக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும், 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 213 டாஸ்மாக் கடைகளும், 128 பார்களும் செயல்பட்டு வந்தன. சாதாரண நாட்களில் ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை வியாபாரம் நடைபெறும். பண்டிகை, விசேஷ நாட்களில் ரூ.10 கோடி வரை வியாபாரம் நடக்கும்.

கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால், ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டன. கிட்டதட்ட 2 மாதங்களுக்கு பிறகு, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 213 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

மதுப்பிரியர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களுக்கு வேண்டிய சரக்குகளை அள்ளிச் சென்றனர். சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. சில இடங்களில் மதுபானங்கள் வாங்கிய மகிழ்ச்சியில், மது பிரியர்கள் சூடம் ஏற்றி வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில், நேற்று ஒரே நாளில் மட்டும், ரூ.7 கோடியே 1 லட்சத்து 77 ஆயிரத்து 510 - க்கு சரக்குகள் விற்றுத் தீர்ந்தன. குறிப்பாக பீர் வகைகள் அதிக அளவில் விற்பனை ஆனதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அதைப்போல் கூட்டம் அதிகம் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும், டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 6 July 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு