கவுந்தப்பாடியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

கவுந்தப்பாடியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
X

கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்.

கவுந்தப்பாடியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி ஊராட்சியில், மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை, வட்டாரப் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில், கவுந்தப்பாடியில் உள்ள 50 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், தற்போதைய பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பண்ணன், கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்