கவுந்தப்பாடி : ரூ.30 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடி : ரூ.30 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்
X
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.30 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,072 மூட்டை களில் நாட்டு சர்க்கரையை கொண்டுவந்தனர்.

இதில் 60 கிலோ மூட்டை திடம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 920-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 950-க்கும் ஏலம் போனது. மீடியம் ரக நாட்டுசர்க்கரை குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 730 க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 770-க்கும் ஏலம் போனது. மொத்தம் 64 ஆயிரத்து 320 கிலோ நாட்டு சர்க்கரை ரூ.30 லட்சத்து 7 ஆயிரத்து 720-க்கு விற்பனை ஆனது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்