பவானியில் இட்லி உண்ணும் போட்டி..! சாப்பாட்டு ராமர்களுக்கு சரியான சவால்..!

இட்லி உண்ணும் போட்டிக்கு ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட போட்டியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பவானி பெத்தாரன் தோட்டத்தில் உள்ள கேஎம்பி மஹாலில் பட்டையா கேட்டரிங்-ன் சார்பாக இட்லி உண்ணும் போட்டி வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) காலை 7.35 மணிக்கு நடைபெற உள்ளது . இதில் வயது வாரியாக 3 விதமாக போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் 4 பேருக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்படவுள்ளது.


போட்டியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி கலந்து கொள்கிறார். இந்த போட்டியினை பட்டாய கேட்டரிங் நிறுவனர் நடராஜன் ஏற்பாடு செய்துள்ளார். போட்டியில் முன்பதிவு நாளை (புதன்கிழமை) 10-ம் தேதி பவானி பெத்தாரன் தோட்டத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே போட்டிக்கான முன்பதிவு நடைபெறுகிறது. போட்டியில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர் மது அருந்த அனுமதி இல்லை. மேலும் போட்டியில் கலந்து கொள்பவர்கள் 10 நிமிடத்திற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும் உள்ளிட்ட விதிகளை பின்பற்றி போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக பட்டையா கேட்டரிங்-ன் நிறுவனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!