தடுப்பூசிக்கு தங்ககாசு, பரிசுகள் அறிவிப்பு -பவானி தாசில்தார் தகவல்

தடுப்பூசிக்கு தங்ககாசு,  பரிசுகள் அறிவிப்பு -பவானி தாசில்தார் தகவல்
X

தடுப்பூசி முகாம்

பவானி அருகே தடுப்பூசிக்கு தங்க காசு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பவானி சட்டமன்ற தொகுதியில் இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்வோருக்கு குலுக்கல் முறையில் 2 பேருக்கு தங்க காசுகள், ஒருவருக்கு மூவாயிரம் மதிப்புள்ள வெள்ளிவிளக்கு, 500 ரூபாய் மதிப்புள்ள புடவைகள் 5 பேருக்கு, 500 மதிப்புள்ள வேட்டிகள் 5 பேருக்கு மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் கூறியதாவது:

பவானி தொகுதியில் இதுவரை 50 சதத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. செப். 12ல் காலை 07:00 மணி முதல் மாலை 07:00 வரை நடைபெறும் முகாமில் பாக்கியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முகாமில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் தங்க காசுகள் உள்பட பல பரிசுகள் வழங்கப்படவுள்ளன. பவானி, அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அருகில் இருக்கும் முகாமிற்கு ஆதார் அட்டை நகலுடன் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

100 சதவீத இலக்கை அடையும் வகையில் பவானி வருவாய்த்துறையினர் மேற்கொண்ட இம்முயற்சி பொதுமக்களிடையே விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!