அண்ணா பிறந்தநாள் : திமுக சார்பில் பவானி நெசவாளர்களுக்கு 5 கிலோ அரிசி

அண்ணா பிறந்தநாள் : திமுக சார்பில் பவானி நெசவாளர்களுக்கு 5 கிலோ அரிசி
X

ஈரோடு திமுக சார்பில் பவானி நெசவாளர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த தினத்தையொட்டி ஈரோடு திமுக சார்பில் பவானி நெசவாளர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் பவானி நகரில் உள்ள நெசவாளர்களுக்கு 5 கிலோ அரிசி சிப்பம் இலவசமாக வழங்கப்பட்டது.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் ஆலோசனையின் பேரில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கே.சரவணன் ஏற்பாட்டில் அண்ணாவின் நாளான நேற்று பவானி நகரில் உள்ள நெசவுக் கூடங்களில் நெய்யும் 113 நெசவாளர்களுக்கு அவரவர்களின் நெசவுக் கூடங்களுக்கு சென்று தலா 5 கிலோ வீதம் அரிசி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது. அண்ணாவின் 113 வது பிறந்தநாளை வலியுறுத்தும் விதமாக 113 நெசவாளர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர்களான சுந்தரம், தங்கவேல், சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai future project