அம்மாபேட்டையில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொது மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், காவிரி ஆற்றில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்பொழுது அணைக்கு 21, 027 கன அடி நீர்வரத்து வந்து கொண்டுள்ள நிலையில், தண்ணீர் வரத்து அதிகரித்தால் காவிரியாற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளது.

எனவே ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களான அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, சின்னபள்ளம் ஆகிய பகுதியில் காவிரியாற்றின் ஓரங்களில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிக்கு செல்லும்படியும், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் வருவாய்துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!