/* */

பவானி அருகே காட்டன் குடோனில் தீ விபத்து

பவானி அருகே காட்டன் கழிவு மறுசுழற்சி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்சம் மதிப்பிலான காட்டன் கழிவுகள் சேதமடைந்தன.

HIGHLIGHTS

பவானி அருகே காட்டன் குடோனில் தீ விபத்து
X

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் அதே பகுதியில் காட்டன் கழிவு மறுசுழற்சி தொழில் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு காட்டன் கழிவு மூட்டைகளில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

‌‌தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தி தலைமையிலான வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் 2 லட்சம் மதிப்பிலான காட்டன் கழிவுகள் தீயில் கருகி சேதமடைந்து இருக்கலாம் எனவும் தகவல் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காஞ்சிக்கோயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்