பவானி அருகே கரும்பு தோட்டத்தில் தீவிபத்து

பவானி அருகே கரும்பு தோட்டத்தில் தீவிபத்து
X

தீயணைப்பு துறையினர் தீயிணை அணைத்த போது எடுத்த படம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை பகுதியில் தோட்டத்தில், கரும்பு வெட்டிய சோகையில் தீ விபத்து ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, ஜம்பை கருக்குபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் . இவர் அதேபகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். கரும்பு அனைத்தும் முழு விளைச்சல் அடைந்துள்ளதால் தற்போது, இவரது காட்டில் அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கரும்பு அறுவடை செய்த சோகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றியவுடன் காற்றின் வேகத்தால் சுமார் 1 ஏக்கர் வரை தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த பவானி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் காந்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags

Next Story
ai marketing future