சித்தோடு பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்ற  ஒருவர்  கைது; ஒருவர் தலைமறைவு

சித்தோடு பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்ற   ஒருவர்  கைது; ஒருவர் தலைமறைவு
X

லாட்டரிச் சீட்டு மாதிரி படம் 

சித்தோடு பகுதியில் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த ஒருவர் கைது.மற்றொருவர் தப்பி ஓடினார்.

குமாரபாளையம்:

ஈரோடு மாவட்டம், சித்தோடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பவானி, தேவபுரம் பகுதியில் வசிப்பவர் மகாதேவன், (35), காளிங்கராயன்பாளையம், பால்பண்ணை சாலையில் வசிப்பவர் தனம், (50). இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்று வந்தனர். தனம் வீட்டின் அருகில் லாட்டரி சீட்டின் நெம்பரை வெள்ளை பேப்பரில் எழுதி, போலி லாட்டரி சீட்டினை விற்று வருவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் எஸ்.ஐ. பெரியண்ணன் தலைமையிலான போலீசார் நேரில் சென்ற போது, மகாதேவன் அங்கிருந்து தப்பி ஓடினார். போலீசார் தனத்தை கைது செய்தனர். தலைமறைவாக இருப்பவரை போலீசார் தேடி வருகின்றனர். தனத்திடமிருந்து நம்பர் எழுதப்பட்ட இரண்டு வெள்ளை சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!