ஈரோடு -சேலத்தை இணைக்கும் பாலம்... ஆபத்தான நிலையில் இருக்கும் அவலம்!

ஈரோடு-சேலம் மாவட்டங்களை இணைக்கும் பாலம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால், அதனை சீரமைக்கக்கோரி, லட்சுமி நகர் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் ஈரோடு, சேலம் பகுதிகளை இணைக்கும் வகையில் பவானி ஆற்றில் இரண்டு பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களாக பாலத்தின் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழும் தருவாயில் உள்ளன.
இந்த பாலத்தின் வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. பாலத்தின் பகுதியில் குண்டும் குழியுமாக இருப்பதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருப்பதாகவும் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டுனர்களும் கூறுகின்றனர்.
இந்த நிலையில், பழுதடைந்த இந்த பாலத்தை உடனடியாக சரி செய்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாவாறு சீரமைத்து தர வேண்டும் என, பவானி காளிங்கராயன் பாளையம் லட்சுமி நகர் ஆட்டோ ஓட்டுனர்கள், தேசிய நெடுஞ்சாலை உதவி பொறியாளரிடம் இடம் புகார் மனு வழங்கினார்கள்.
மனுவை பெற்று கொண்ட உதவி பொறியாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்