டாஸ்மாக் அடைப்பு எதிரொலி: மூட்டையில் அள்ளி செல்லும் மதுபாட்டில்கள்

டாஸ்மாக் அடைப்பு எதிரொலி: மூட்டையில் அள்ளி செல்லும் மதுபாட்டில்கள்
X
ஈரோடு மாவட்டம் பவானியில் மதுபிரியர்கள் மூட்டை மூட்டையாக சரக்கு வாங்கி சென்றனர்.

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகமாக உள்ளதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து வருகின்ற 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என்று இன்று காலை தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் 12.00 மணி வரை நடத்திக் கொள்ளலாம் எனவும் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படாது எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று பவானி அந்தியூர் மெயின் ரோட்டில் உள்ள அரசு டாஸ்மார்க் கடை முன்பு காலை முதலே குடிமகன்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. தங்களுக்கு தேவையான சரக்கு பாட்டில்களை தாங்கள் கொண்டு வந்த பைகள் மற்றும் மூட்டைகளில் அடுக்கி வைத்து கொண்டு மூட்டை மூட்டையாக எடுத்து சென்றனர்.



Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!