பவானி அருகே தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பவானி அருகே தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

பவானி அருகே உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பெருமாள்மலை பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் என்பவரை பணியாளர் சங்கம் சார்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ள குறைகளை உண்மையை சுட்டிகாட்டியதற்கு பணி நீக்கம் செய்யப்பட்டார். பணி நீக்கம் செய்ததை திரும்ப பெற வேண்டும் எனவும் அவரை மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும் என கோசம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!