பண்டிகை காலம் என்பதால் நாட்டு சர்க்கரை , வெல்லம் விலை உயர்வு

பண்டிகை காலம் என்பதால் நாட்டு சர்க்கரை , வெல்லம் விலை உயர்வு
X
ஈரோடு மாவட்டம் சித்தோடு மார்க்கெட்டில் வெல்லம் விலை உயர்வு

ஈரோடு மாவட்டம் சித்தோடு வெல்லம் மார்க்கெட்டுக்கு நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 1,500 மூட்டை நாட்டு சர்க்கரை வந்தன. ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,260 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 30 கிலோ எடை கொண்ட, 2,600 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,310 ரூபாய்க்கு விற்பனையானது. அச்சு வெல்லம், 30 கிலோ எடை கொண்ட, 800 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,220 ரூபாய் முதல், 1,280 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், அச்சு வெல்லம் கிலோவுக்கு மூன்று ரூபாய், மூட்டைக்கு, 90 ரூபாய் என உயர்ந்து காணப்பட்டது. நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் ஆகியவை கிலோவுக்கு இரண்டு ரூபாய், மூட்டைக்கு, 60 ரூபாய்க்கு மேல் உயர்ந்து காணப்பட்டது. இன்னும், 25 நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், இவற்றின் விலை உயர்ந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!