சித்தோடு மார்க்கெட்டில் நாட்டு சர்க்கரை , வெல்லம் விலை உயர்வு

சித்தோடு மார்க்கெட்டில் நாட்டு சர்க்கரை , வெல்லம் விலை உயர்வு
X

பைல் படம்.

தொடர் மழை காரணமாக சித்தோடு மார்க்கெட்டில் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை மூட்டைக்கு ரூ.90 வரை விலை உயர்வு.

ஈரோடு மாவட்டம் சித்தோடு வெல்லம் மார்க்கெட்டில் நேற்று நாட்டு சர்க்கரை 30 கிலோ எடையுள்ள 1,500 மூட்டைகள் வரத்து காணப்பட்டது. ஒரு மூட்டை ரூ.1,200 முதல் ரூ.1,330 வரையில் விற்பனையானது. இதேபோல் உருண்டை வெல்லம் 30 கிலோ எடையுள்ள 1,400 மூட்டை வரத்து காணப்பட்டது. ஒரு மூட்டை ரூ.1,230 முதல் ரூ.1,350 வரை விற்பனையானது. அச்சு வெல்லம் 30 கிலோ எடையுள்ள 400 மூட்டை வரத்து காணப்பட்டது. ஒரு மூட்டை ரூ.1,300 முதல், ரூ.1,390 வரை விற்பனையானது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் மழை பெய்து வரும் காரணமாக வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை வரத்து குறைந்து காணப்பட்டதால் மூட்டை ஒன்றுக்கு சராசரியாக ரூ.90 வரை விலை உயர்ந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!