கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிப்பு

கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிப்பு
X
ஈரோட்டில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிதக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா 2 -வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூலை 11-ந் தேதி வரை தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு ஆங்காங்கே வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விதிமுறைகளை மதிக்காமல் மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அவ்வகையில், இன்று ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதைபோல் சமூக இடைவெளியை பின்பற்றாத 25பேருக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. 47 மோட்டார் சைக்கிள்களும், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வகையில் விதிமுறைகளை மீறியவர்கள் என மொத்தமாக 1 லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!