அம்மாபேட்டையில் தொடர்மழை -20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது

அம்மாபேட்டையில் தொடர்மழை -20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது
X
பவானி, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை, கொடிவேரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள், தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. மாவட்டத்தில் நேற்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பவானி, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை, கொடிவேரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான குறிச்சி வயக்காடு பகுதி சித்தார், பூனாட்சி, நத்தமேடு, அய்யந்தோட்டம், சீலம்பட்டி, கூச்சிக்கல்லூர், ராமாட்சி பாளையம், சுப்பராயன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 9 மணி வரை 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது.இதன் காரணமாக அந்த பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. வயல்வெளிகளே தெரியாத அளவுக்கு மழைத்தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதே போல் மக்காச்சோளம் மற்றும் வாழைகளும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!