பவானியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

பவானியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்
X
மாற்றுத்திறனாளிகள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்.
பவானியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானி ஒன்றியம் கவுந்தப்பாடி ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் இன்று (22-10- 2021) நடைபெற்றது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீட்டுமனை பட்டா மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மனநல மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், காது-மூக்கு-தொண்டை மருத்துவம் உட்பட அனைத்து மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பவானி தெற்கு ஒன்றிய திமுக கழக பொறுப்பாளர் துரைராஜ் கலந்து கொண்டு கூட்டத்தை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர் உட்பட உபகரணங்களை வழங்கி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.உடன் கவுந்தப்பாடி ஊராட்சி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!