கைத்தறி ஜமுக்காள நெசவாளர்களுக்கு போனஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கைத்தறி ஜமுக்காள நெசவாளர்களுக்கு போனஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு
X

கைத்தறி நெசவு.

பவானி வட்டாரத்தில் கைத்தறி ஜமுக்காள நெசவுத் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.230 கூடுதலாக போனஸ் வழங்க முடிவு.

கைத்தறி ஜமுக்காள நெசவுத் தொழிலாளர்களுக்கு தீபாவளிப் பண்டிகைக்கு போன்ஸ் வழங்க வேண்டும் என பவானி வட்டார கைத்தறி ஜமுக்காள, பெட்ஷிட் நெசவாளர், சாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் சங்கப் பிரதிநிதிகள். நெசவுக் கூட உரிமையாளர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட போனஸ் தொகையுடன் ரூ. 230 கூடுதலாக சேர்த்து இம்மாதம் 30ஆம் நேதிக்குள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதில், தொழிற்சங்கச் செயலாளர் வ.சித்தையன், பொருளாளர் கோவிந்தன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பி.எஸ்.பூபதி, எஸ்.பி.எம்.கல்யானாசுந்தரம், நெசவுக் கூட உரிமையாளர்கள் தரப்பில் கே.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business