பவானி: தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய அமைச்சர்!

பவானி: தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய அமைச்சர்!
X

பவானி நகராட்சியை சேர்ந்த தூய்மைப்பணியாளர்களுக்கு, அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் முத்துசாமி இன்று வழங்கினார். 

பவானி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்

ஈரோடு மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, மாநகராட்சி, நகராட்சி சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இப்பணிகளை மேற்கொள்ளும் முன்கள பணியாளர்களானளான தூய்மைப்பணியாளர்களுக்கு தமிழக அரசின் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அத்தியாவசிய பொருட்கல் வழங்குதல் உள்ளிட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வகையில், பவானி நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, பவானி நகராட்சி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாசிய பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!