பவானியில் நாளை நடைபெறும் தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு

பவானியில் நாளை நடைபெறும் தடுப்பூசி முகாம் குறித்து  விழிப்புணர்வு
X

பவானி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய வருவாய் துறை அதிகாரிகள்.

பவானி பேருந்து நிலையத்தில் நாளை நடைபெறும் தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வட்டாட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் நாளை, ஐந்தாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. பவானி தாலுகா பகுதியில், தடுப்பூசி போடுவோரை ஊக்கப்படுத்தும் வகையில், வருவாய் துறை அதிகாரிகள், தங்கம், வெள்ளி காசு, மொபைல் போன் ரீ-சார்ஜ் கூப்பன், குத்து விளக்கு உள்ளிட்ட பொருட்களை குலுக்கல் நடத்தி பரிசாக வழங்கி வருகின்றனர். நாளை நடைபெற உள்ள தடுப்பூசி முகாமுக்கும், பரிசுகளை அறிவித்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அம்மாபேட்டை ஒன்றியம், சின்னபுலியூர், ஓடத்துறை ஊராட்சி மக்களுக்கு கிடைக்காது. பிற பகுதி மக்களுக்கு மட்டுமே பரிசு உண்டு. முதல் பரிசாக, 1,000 ரூபாய் மதிப்பில், ஐந்து பேருக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ், இரண்டாவது பரிசாக, 100 பேருக்கு குடை அறிவித்துள்ளனர். பவானி தாலுகா அலுவலகத்தில், 13ம் தேதி இதற்கான குலுக்கல் நடக்கும். பரிசு பொருட்கள் பயனாளிகளின் வீடு தேடி வரும் என்றும், வருவாய் துறை அதிகாரிகள் பவானி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!