கோவில்களில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில், இந்து மக்கள் கட்சியின் இணைப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது.
இந்து மக்கள் கட்சியின் இணைப்பு விழா மற்றும் கொடியேற்று விழா, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது:
இந்து கோவில்களில் அறநிலையத்துறை விதிகளின் படி இந்துக்கள் மட்டுமே பணியாற்ற முடியும். சமீபத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பணிக்கு, இஸ்லாமியர்களையும் நியமனம் செய்தது சட்டவிரோதம். அதற்கான நியமன உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு சிவகாசி பட்டாசுகளை ஆதரிக்க வேண்டும். சீன பட்டாசுகளை புறக்கணிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் சாராய ஆலைகளை மூடுவதாக, கனிமொழி வாக்குறுதி அளித்தார். இதை அவர் நிறைவேற்றிக் காட்ட வேண்டும்.
இந்து மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தின் முன்பு, அக்டோபர் 26ல், 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, மக்கள் இயக்கத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவக்கியுள்ளார். இதற்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu