பாதுகாப்பு கேட்டு ஒரே நாளில் 12 காதல் ஜோடிகள் காவல்நிலையத்தில் தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு ஒரே நாளில் 12 காதல் ஜோடிகள் காவல்நிலையத்தில் தஞ்சம்
X

7 காதல் ஜோடிகள்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3 காவல் நிலையங்களில் 12 காதல் ஜோடிகள் திருமணம் செய்து, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 7 காதல் ஜோடிகளும், அந்தியூர் காவல் நிலையத்தில் 3 காதல் ஜோடிகளும், பவானி காவல் நிலையத்தில் 2 காதல் ஜோடிகளும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தன. காதல் திருமணம் செய்து கொண்ட அனைவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால் அவர்களது பெற்றோர்களை அழைத்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் நடத்திய சமாதான பேச்சில் பெண் வீட்டார் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க, மணமகன் வீட்டார் திருமணத்தை ஏற்றுக் கொண்டு மணமக்களை தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!