இராஜராஜ சோழனின் 1036-வது சத்ய விழா: கவுந்தப்பாடி காேவிலில் சிறப்பு வழிபாடு

இராஜராஜ சோழனின் 1036-வது சத்ய விழா: கவுந்தப்பாடி காேவிலில் சிறப்பு வழிபாடு
X

பவானி அருகே உள்ள கவுந்தப்பாடியில் திருநீலகண்டர் கோவிலில் உள்ள இராஜராஜ சோழனின் திருவுருவச் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பவானி அருகே இராஜராஜ சோழனின் 1,036-வது சத்ய விழாவினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இராஜராஜ சோழனின் 1,036- வது சதய விழாவை முன்னிட்டு இராஜராஜ சோழனின் திருவுருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது. மாமன்னர் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆண்டு தோறும் அரசு விழாவாக 2 நாட்கள் சதய விழா கொண்டாடப்படுகிறது. இதே நாளில் தமிழகம் முழுவதும் இராஜராஜ சோழனின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
நேற்று 1,036-வது சதய விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கவுந்தப்பாடியில் திருநீலகண்டர் திருக்கோவில் உள்ள இராஜராஜ சோழனின் திருவுருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து 108 கலச பூஜை, தேவாரம், திருவாசகம் ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

Tags

Next Story
ai and future cities