பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா
63 நாயன்மார் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வண்ண விளக்குகளால் அமைக்கப்பட்ட சப்பரத்தில், கோவிலிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது. காசிக்கு இணையாக கருதப்படும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5வது நாளான பஞ்ச மூர்த்திகள் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிவன், சக்தி, பெருமாள், முருகன், விநாயகர் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வண்ண விளக்குகள் செய்யப்பட்ட சப்பரத்தில் வைத்து கோவிலில் இருந்து புறப்பட்டு ஈரோடு செல்லும் சாலை, காவிரி வீதி, பூக்கடை பிரிவு உள்ளிட்ட பவானி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று கோவிலில் நிறைவடைந்தது.
இதில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் மேள தாளத்துடன் பக்தி பாடலை பாடி நடனமாடினர். தொடர்ந்து ஓதுவார்கள் பன்னிரு திருமுறை பாடல்களை இசைத்தனர். பின்னர் வழி நெடுங்களிலும் இருந்த பக்தர்கள் 63 நாயன்மார்கள் மீது பூக்களை தூவி நமச்சிவாய என முழுக்கம் எழுப்பினர். தொடர்ந்து 16,17ம் தேதி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu