85 அடியை நெருங்கியது பவானிசாகர் அணை நீர்மட்டம்
பவானிசாகர் அணை.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். இந்த அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக இருக்கிறது.
இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. இதனால், அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது.
இதனிடையே, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று (22ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,036 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (23ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,628 கன அடியாக சரிந்தது.
அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 84.19 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 84.75 அடியாக உயர்ந்தது. விரைவில் 85 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 18.01லிருந்து 18.33 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 1,200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu