பவானிசாகர் அணை: நீர்வரத்து 3,243 கன அடியாக சரிவு

பவானிசாகர் அணை: நீர்வரத்து 3,243 கன அடியாக சரிவு
X
பவானிசாகர் அணை (கோப்புப் படம்).
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,243 கன அடியாக சரிந்தது. அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று (17ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,243 கன அடியாக சரிந்தது. அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாரில் உள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை. 105 அடி உயரமுள்ள இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது.

இந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. நேற்று (16ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,471 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (17ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,243 கன அடியாக குறைந்தது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை 96.66 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 96.96 அடியாக உயர்ந்தது. விரைவில் 97 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 26.19 டிஎம்சியிலிருந்து 26.41 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 700 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,300 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நிலவரப்படி 2.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!