பவானி: எலி மருந்து சாப்பிட்டவர் பலி

பவானி:  எலி மருந்து சாப்பிட்டவர் பலி
X

பைல் படம்

அம்மாபேட்டை அருகே எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தார் பகுதியை சேர்ந்தவர் தாமஸ். இவரது மனைவி அல்போன்ஸ்மேரி. குடும்ப பிரச்சினை காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மனைவி தாயார் வீட்டிற்கு சென்றவர் திரும்பி வரவில்லை.

இந்த மன வேதனையில் கடந்த 6-ம் தேதி தாமஸ் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாமஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு