பவானி:குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி தலைவருக்கு பாராட்டு

குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சித் தலைவர் சுப்பிரமணியத்துக்கு, பாராட்டுச் சான்றிதழை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். உடன், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எம்பி அந்தியூர் செல்வராசு உள்ளிட்டோர் உள்ளனர்
ஈரோடு மாவட்டம் பவானி ஒன்றியம், குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சித் தலைவர் சுப்பிரமணியம். இவர், கடந்த 1996, 2001 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றார். 3-வது முறையாக தலைவராகி உள்ள இவர், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல், கொரோனா தடுப்பு நடவடிக்கை, மக்களுக்கு பாகுபாடு இன்றி அரசின் நலத்திட்டங்களை பெற்று தருதல், தன்னலமற்ற சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது சேவையை பாராட்டும் வகையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஊராட்சி தலைவர் சுப்பிரமணியத்துக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எம்பி அந்தியூர் செல்வராசு, கூடுதல் கலெக்டர் மதுபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu