பவானி கூடுதுறையில் நாளை முதல் தர்ப்பணம் செய்ய அனுமதி
கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில்.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனோ தடுப்பு நடவடிக்கையால் பவானி கூடுதுறையில் கடந்த மே மாதம் முதல், திதி மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய திருத்தலங்களில் தர்ப்பணம் தீர்த்தங்களில் புனித நீராட அனுமதித்துள்ளனர். ஆனால், கூடுதுறையில் தடை தொடர்வது பக்தர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
பவானியில் நேற்று முன்தினம் பேசிய இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத், கூடுதுறையில் உடனடியாக தடையை நீக்க வேண்டும். தடை தொடர்ந்தால் நவம்பர் 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சபர்மதி நேற்றிரவு கூறியதாவது: கூடுதுறையில் விதிக்கப்பட்ட தடை நவம்பர் 30-ம் தேதியுடன் முடிகிறது. டிசம்பர் 1-ம் தேதி (நாளை) முதல் திதி, தர்ப்பணம் செய்ய மக்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu