பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் நூல் விற்பனை நிலையம் திறப்பு

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் நூல் விற்பனை நிலையம் திறப்பு
X

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் நூல் விற்பனை நிலையம் திறப்பு

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் நூல் விற்பனை நிலையத்தை மண்டல இணை இயக்குநர் பரஞ்சோதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் சிறப்பு வாய்ந்த கோயில்களில் தமிழின் தொன்மையான நூல்களை கொண்ட நூல் விற்பனை நிலையம் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் "அன்னை தமிழில் அர்ச்சனை" என்ற தலைப்பில் நூல் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. இதனை இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை இயக்குநர் பரஞ்சோதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


இதில் கூடுதுறையின் தல வரலாறு நூல்கள், வைணவ நூல்கள், சைவ நூல்கள் என வெளி சந்தையில் கிடைக்காத நூல்களும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக மண்டல இணை இயக்குநர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, கோயில் வளாகத்தில் கூடுதுறையின் தல வரலாற்றை பக்தர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தொலைக்காட்சியில் வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டது.

Tags

Next Story
AI-ன் வருங்கால வளர்ச்சி - தொழில்நுட்பத்தின் புதிய நிலையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!