பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி சுவாமி தரிசனம்

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி சுவாமி தரிசனம்
X

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த உச்ச நீதிமன்ற நீதிபதி விசுவநாதனுக்கு கோயில் குருக்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்ற போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விசுவநாதன் சுவாமி தரிசனம் செய்தார்.

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விசுவநாதன் சுவாமி தரிசனம் செய்தார்.

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விசுவநாதன் சேலம் சட்டக் கல்லூரியில் இன்று (டிச.28) நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமான மூலம் நேற்று (டிச.27) கோவைக்கு வந்தார்.

பின்னர், கார் மூலம் சேலம் செல்வதற்காக வந்த அவர் ஈரோடு மாவட்டம் வழியாக சென்ற போது பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு வந்த அவருக்கு கோயில் குருக்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர், பவானி சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மனை வழிபட்டார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன், மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சுகுமார், பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் அருள்குமார், பவானி தாசில்தார் சித்ரா மற்றும் பவானி வழக்கறிஞர் சங்க தலைவர் ஆறுமுகம் உள்பட அதிகாரிகள் பலர் அவருடன் சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து, அவர் கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.

Tags

Next Story