பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் ரூ.13.23 லட்சம் உண்டியல் காணிக்கை
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
Bhavani Kooduthurai Sangameshwarar Temple-ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் வருவது வழக்கம்.இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கோவில் வளாகத்தில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றுவது வழக்கம். இந்த நிலையில், கோவிலில் உள்ள 21 உண்டியல்களை திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
இந்து அறநிலையத்துறையின் உதவி ஆணையாளர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் தன்னார்வ அமைப்பினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என்று ஏராளமானோர் குழுக்களாக உண்டியல் காணிக்கை எண்ணினர். இதில், ரூ.13லட்சத்து 23 ஆயிரத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.மேலும், 45 கிராம் தங்கமும்,195 கிராம் வெள்ளியும் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
இதையடுத்து இந்து அறநிலையத்துறையின் அதிகாரிகள் சரிபார்த்து பவானியில் உள்ள கனரா வங்கியில் இந்து அறநிலையத்துறையின் கணக்கில் செலுத்தி உள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu