பவானி, கோபிசெட்டிபாளையம் இன்றைய முக்கிய செய்திகள்
பவானி செய்திகள்:-
* சித்தோடு அருகே பெண் தீயில் கருகிய உயிரிழப்பு:- சித்தோடு அருகே உள்ள பெருமாள்மலை ராஜூவ்நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி நாகராணி (வயது 45). சம்பவத்தன்று, நாகராணி டீ வைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது, எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த நைட்டியில் தீ பற்றியது. பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
கோபிசெட்டிபாளையம் செய்திகள்:-
* கள்ளிப்பட்டி அருகே விஷம் குடித்தவர் உயிரிழப்பு:- பங்களாப்புதூர் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள ஏரங்காட்டூர் குளத்துக்காட்டை சேர்ந்தவர் ஈஸ்வரி. கூலித்தொழிலாளி. இவரது கணவர் காளியப்பன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது இளைய மகன் மாதன் (வயது37). திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருந்து வேறுபாடு காரணமாக தாயார் ஈஸ்வரியுடன் இருந்து வந்தார். நேற்று இரவு 11.30 மணியளவில் வயிற்று வலியால் பூச்சி மருந்தை குடித்து விட்டார். குடும்பத்தினர் மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், இன்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* சிறுவலூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வேன் மோதி விபத்து:- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 34). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று, இவர் இருசக்கர வாகனத்தில் கெட்டிசெவியூரில் இருந்து நம்பியூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குமார் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சரக்கு வேனில் வந்த பாலமுருகன் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி படுகாயத்துடன் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, சிறுவலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu