பவானி அருகே தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதம்

பவானி அருகே  தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதம்
X

தீ விபத்தில் சேதமடைந்த வீடு. 

பவானி அருகே சமையல் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவால், குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதிக்குட்பட்ட சன்னியாசிபட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவளாயி. இவரும் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த பவானி தீயிணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயிணை அணைத்தனர். இதனால், உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து, சமையல் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயிணைப்பு துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!