பவானி அருகே குழாய் உடைந்து வெளியேறிய குடிநீரில் குளித்த இளைஞர்

பவானி அருகே குழாய் உடைந்து வெளியேறிய குடிநீரில் குளித்த இளைஞர்
X

சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் காட்சிகள்.

பவானி அருகே குழாய் உடைந்து வெளியேறிய குடிநீரில் குளித்த இளைஞரின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி நகரின் மையப்பகுதியான அந்தியூர் பிரிவு - மேட்டூர் சாலையில், நகராட்சி ஆணையாளர் குடியிருப்புக்கு எதிரில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வந்தது. இதுகுறித்து, பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆணையாளரின் குடியிருப்புக்கு எதிரில் குடிநீர் வீணாகிச் சென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், குடிநீர் வெளியேறியதைக் கண்ட இளைஞர் ஒருவர் அந்த தண்ணீரில் ஆடைகளைத் துவைத்ததோடு, உற்சாகமாக குளித்தும் மகிழ்ந்தார். இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சம்பவ இடத்தில் ஆய்வு செய்த நகராட்சி ஊழியர்கள் விரைந்து உடைப்பை சரி செய்வதாகத் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!