பவானி செல்லியாண்டி அம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனுக்கு தண்ணீர்,மஞ்சள்,பால் ஊற்றி வழிபாடு.

பவானி செல்லியாண்டி அம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனுக்கு தண்ணீர்,மஞ்சள்,பால் ஊற்றி வழிபாடு.
X

பவானி செல்லியாண்டி அம்மன் கோவிலில்  சுவாமி கருவறையில் உள்ள அம்மனுக்கு நேரடியாக பக்தர்கள் சென்று நீர் ஊற்றும் நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டம் பவானி செல்லியாண்டி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கருவறைக்குள் நேரடியாக சென்று வழிபட்டனர்

ஈரோடு மாவட்டம் பவானியில் 200ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லியாண்டி அம்மன் திருக்கோயில் உள்ளது.இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

நிகழாண்டுக்கான திருவிழா கடந்த 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கம்பம் நடுதல் 26ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி கருவறையில் உள்ள அம்மனுக்கு நேரடியாக பக்தர்கள் சென்று நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற வருகிறது. இதில் ஈரோடு,நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 20ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள்,சிறுவர் சிறுமியர் ஆகியோர் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தும் வீடுகளில் இருந்து மஞ்சள்,பால்,தயிர்,பன்னீர், ஆகியவற்றை கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

இதனால் பவானி சுற்று வட்டார பகுதியில் நோய் தொற்று ஏற்படமால் எல்லை காவல் தெய்வமாக உள்ள செல்லியாண்டி அம்மன் ஊரை காப்பாற்றுவாள் என்ற ஐதீகம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் குழந்தை வரம் இல்லாதவர்கள்,தொழில் தொடர்ந்து பின்னடைவு ஏற்படுவதை தவிர்க்க,குடும்பத்தில் நோய் பிரச்சினை ஏற்படமால் மற்றும் நினைத்தது நிறைவேற வேண்டும் என்று வேண்டுதல் வைத்து சாமிக்கு நீராட்டுதல் நடைபெறுகிறது. தமிழகத்தில் எந்த பகுதியிலும் கருவருறைக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் விழாவில் 3வது செவ்வாய் கிழமை பெண்கள் உட்பட பக்தர்கள் நேரடியாக கருவறையில் சாமிக்கு தண்ணீர் உட்பட பொருட்களால் அபிஷேகம் செய்வது தனி சிறப்பு என்று கோவில் நிர்வாகிகள் கூறுகின்றனர்..

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!