பவானியில் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன், எல்லையம்மன் கோவில் திருவிழா

பவானியில் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன், எல்லையம்மன் கோவில் திருவிழா
X

கோப்பு படம் - காளியம்மன் கோவில். 

பவானி செல்லியாண்டி அம்மன், மாரியம்மன், எல்லையம்மன் கோவில் திருவிழா இன்று இரவு 8 மணிக்கு பூச்சாட்டு விழாவுடன் தொடங்குகிறது.

ஈரோடு மாவட்டம் பவானி செல்லியாண்டி அம்மன், மாரியம்மன், எல்லையம்மன் கோவில் திருவிழா இன்று இரவு 8 மணிக்கு பூச்சாட்டு விழாவுடன் தொடங்குகிறது.விழாவையொட்டி வரும் 22ஆம் தேதி இரவு 8 மணிக்கு கம்பம் நடுதல் விழாவும், 23ஆம் தேதி காலை. 9 மணிக்கு கொடியேற்றம் விழாவும் நடக்கிறது. வரும் மார்ச் 1ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் மதியம் வரை சார்பில் அம்மனுக்கு புனித நீராட்டு விழாவும் நடக்கிறது. இதில் பக்தர்கள் கருவறைக்கு சென்று அம்மனுக்கு பால், மஞ்சள் நீர் மற்றும் புனித நீர் ஊற்றி வழிபடுவார்கள்.

இதனையடுத்து, மார்ச் 1ஆம் தேதி மதியம் மாரியம்மன் கோவில் பூமிதிக்கும் விழாவும், 2ஆம் காலை 10 மணிக்கு எல்லையம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைத்தல் விழாவும். 12 மணிக்கு பொங்கல் விழாவும், 3ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம், அன்று மாலை 6 மணிக்கு கம்பம் எடுத்து ஆற்றில் விடும் விழாவும் நடக்கிறது.விழாவையொட்டி 4ஆம் தேதி இரவு பரிவேட்டை, 5ஆம் தேதி இரவு தெப்ப உற்சவம், 6ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடை பெற உள்ளது.

Tags

Next Story
ஈரோட்டில் இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணைய கிடங்குக்கு மாற்றம்..!